பாவை விழா '26
13 Jan 2026
மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் இறைவழிபாட்டுப் பாடல்களான திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை நமது பள்ளி மாணவர்கள் இறை வணக்கத்தின் போது தினமும் பாடினார்கள். அதற்கு மகுடம் சூட்டும் வகையில் கூடாரவல்லியை முன்னிட்டு இம்மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை பாவை நோன்பின் சிறப்பை விளக்கும் பாவை விழா கொண்டாடப்பட்டது. அதில் கே.ஜி முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சிப் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நமது பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More